தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதித்தார். இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே பையா 2 படத்தை எடுக்க போவதாக லிங்குசாமி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது கார்த்தி தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கடந்த 2010-ம் ஆணடு வெளியான பையா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் பையா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.