பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பதம் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஷாருக்கான் நடிப்பில் ஓம் சாந்தி ஓம் என்கிற திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானின் தந்தையாக பாகிஸ்தான் நடிகர் ஜாவேத் ஷேக் நடித்திருந்தார். இவருக்கு பட குழு சம்பளம் பேசிய போது ஷாருக்கானுடன் நடிப்பதே தனக்கு மிகப்பெரிய பெருமை. எனக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார். ஆனால் பட குழு ஒரு பெரிய தொகையை சம்பளமாக நியமித்து அவருக்கு கொடுத்துள்ளது. மேலும் இந்த தகவலை ஒரு பேட்டியில் தற்போது நடிகர் ஜாவேத் ஷேக் கூறியுள்ளார்.