தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி தமிழா. இவர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் தற்போது வீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று நாட்கள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி படம் 3 நாட்களில் 6 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இதேபோன்று முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் 3 நாட்களில் 5 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.