தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்திருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் சேலையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தற்போது ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.