செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33 இடங்களில் மிக கனமழையும்,  12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழைக்கான எச்சரிக்கையை  பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ஏற்கனவே தரப்பட்ட சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) தொடர்கிறது.

மேலும் விருதுநகர்,  தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும்,  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்தில் ஓரிரு  இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்  கன மழைக்கான வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை குமரி கடல்,  மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற் பகுதிகளில் அடுத்துவரும் இரு  தினங்களுக்கு பலத்த காற்றானது வீசுக்கூடும் மீனவர்கள்  இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வட கிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 44 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 42 சென்டிமீட்டர். இது 5  சதவீதம் இயல்பை விட அதிகம்.ஒவ்வொரு இடத்திலும் பதிவான விவரங்கள் தரப்பட்டுள்ளது. விவரங்களை சரிபார்க்கப்பட்டு பிறகு தரப்படும்.

39 இடங்களில் கனமழை அதிகன மழை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் 442 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு பாத்தீங்கன்னா 200 மில்லி மீட்டர் 10.12.1931. 292.8 மில்லி மீட்டர் 09.01.1963.டிசம்பர் மாதம் 10ஆம் தேதி 20 சென்டிமீட்டர்… மொத்தமா ஆண்டில் 29 சென்டிமீட்டர் 1963 ஜனவரி மாதம் என தெரிவித்தார்.