செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம் அதிகம். நெல்லையில் 135 சதவீதம் இயல்பை  விட அதிகம்.

தூத்துக்குடியில் 68 சென்டிமீட்டர் இயல்பை விட அதிகம், தென்காசியில் 80% இயல்பை விட அதிகம். இது எல்லாமே இந்த வருடத்தினுடைய அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் இருக்கக்கூடிய டேட்டாவை வைத்து பார்க்கும்போது கிடைத்த தகவல்… எச்சரிக்கையை பொறுத்த வரைக்கும் நமக்கு மூன்று வகையாக சொல்கிறோம்.

மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு. 7 சென்டிமீட்டர் முதல் 11 சென்டிமீட்டர் மழை வரை மஞ்சள் எச்சரிக்கையும்,   12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் ஆரஞ்சு அலெர்ட். 21 சென்டிமீட்டருக்கு மேல்  என்பது சிவப்பு எச்சரிக்கை. IMDயை மூனே மூணு கேட்டகிரி தான் வகைப்படுத்தி உள்ளது. 14ஆம் தேதி முதல் தொடர்ந்து 14, 15, 16 ஆம் தேதி வரைக்கும் கன முதல் மிக கனமழைக்கு இந்த நான்கு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை  கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அதி கன மழைக்கான வாய்ப்பு அறியப்பட்ட போது அந்த அப்டேட்யும் கொடுத்திருக்கிறோம்.நீங்க சொல்ற மாதிரி 95 சென்டிமீட்டர் மழை பெய்யும், 65 சென்டிமீட்டர் மழை பெய்யும் என குறிப்பிட்டு கொடுக்க முடியாது. மூன்றே கேட்டகிரிதான் உள்ளது. இந்த மூன்று கேட்டகிரியில்  21 சென்டிமீட்டருக்கு மேல எதுவா இருந்தாலும் சிவப்பு எச்சரிக்கை. ரெட் அலெர்ட்டுக்கு மேல ஒன்னும் இல்ல என தெரிவித்தார்.