செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து நாம கன முதல் மிக கனமழை அலெர்ட் கொடுத்து இருந்தோம். 14ஆம் தேதி முதல் எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம்.

நேற்று அதனுடைய வாய்ப்பு இன்னும் அதிகரிக்கப்படும் போது அதையும் எச்சரிக்கையாக கொடுத்திருக்கின்றோம்.  பரவலாக மழை  அதிகமாக தான் பெய்து இருக்கிறது. பரவலாக நிறைய கனமழை இருந்துள்ளது. அதி கனமழை பெய்திருக்கிறது.

1 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை  பெய்தால் தான் மேக வெடிப்பு என சொல்லுவோம். இது தொடர்ந்து நாள் முழுவதும் இருந்துள்ளது. எனவே இது மேக வெடிப்பு இல்லை. இது அதீ கன மழை. IMDயில் இருக்கக்கூடிய சிஸ்டம் ரெட் அலர்ட் என்று சொல்லப்பட்டாச்சு.  ரெட் அலெர்ட்டுக்கு  மேல ஒரு எச்சரிக்கை இருக்கான்னு பாருங்க. வானிலை முறையில் 3 கேட்டகரி தான்.

கன முதல் மிக கனமழை சொல்லும் போது…. 19 சென்டிமீட்டருக்கு வந்திருக்கிறது…. 20 சென்டிமீட்டர் உள்ளே வர பெய்வது மிக கனமழை. நேற்று முன்திலிருந்து நேற்று வரை பார்க்கின்றபோது 24 மணி நேரத்தில் மிக கனமழை தொடர்ந்து 14ஆம் தேதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து அடுத்த கேட்டகிரிக்கு  போயிருக்கிறது. 19 சென்டிமீட்டர் வரைக்கும் உள்ள கேட்டகிரி கொடுத்திருக்கிறது.

20 சென்டிமீட்டர் மேல உள்ள கேட்டகிரி ரெட் அலெர்ட். இப்போ உள்ள சூழலில் அந்த அலெர்ட்டும் கொடுத்துள்ளோம். 14ஆம் தேதியில் இருந்தே கனமழை மிக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்தினுடைய மழையளவு  தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையில் அளவு அதிகமா தான் இருக்கு. கனமழை கன எச்சரிக்கை 3 வகை 11 சென்டிமீட்டர் 12 சென்டிமீட்டர் 20-க்கு மேல இருக்கும் சிவப்பு எச்சரிக்கை இப்படித்தான் சொல்றாங்க.

ஒரு வழி மண்டல மேலடுக்கு சுழற்சியில் இருந்து இத்தகைய மழை  அளவு மழை எப்போதும் நடந்ததாக இல்லை.நேற்றைக்கு முன் தினத்திலிருந்து நேற்று வரை கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் வேகத்தில் தான் நகர்ந்துள்ளது.இலங்கைக்கு தென்கிழக்கிலிருந்து குமரி கடலுக்கு வந்து,  குமரிக்கடலிலும் தொடர்ந்து நிழலவுகிறது. மிக மெதுவாதான் நடந்துகிட்டு இருக்கு. இந்த வளிமண்டலம் மேல் அடுக்கு சுழற்சி இருந்ததால் இந்த மழை பொலிவு.

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால் இந்த அளவுக்கு பரவலாக எல்லா இடங்களிலும் மிக பெரிய கன மழையாக பெய்தது இல்லை.எந்த இடத்தில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்யும் என எதிர்காலக்த்தில் அறிவியல் வளரும் போது நிச்சயமாக கணிக்கப்படும் எந்த துறையும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு இருந்த  நிலையை விட இப்ப முன்னேறி இருக்கின்றோம்.

மழையே சொல்லாமல் கடும் மழை இருந்த கால கட்டம் எல்லாம் இருந்துள்ளது. 15, 16,  17 எல்லா நாட்களும் சொல்கிறோம். மிக கனமழை 14 ஆம் தேதியிலிருந்து சொன்னோம். அதி கன மழை நேற்று காலையில் இருந்து  சொல்லப்பட்டிருக்கிறது. நேற்று காலை 10,  11 மணிக்கு அப்கிரேட் பண்ணி இருக்கிறது. கன மழை மற்றும் அதீ கன மழை 14ஆம் தேதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு கட்டுரைகள் எல்லாம் காட்டுவது என்னவென்றால் ? தென் தமிழக பகுதியில் வடகிழக்கு பருவமழை வருங்காலத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும்.