ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே மாதம் 1 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (ஏப்ரல் 29) முதல் தொடங்க இருக்கிறது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ‌‌.1700 முதல் அதிகபட்சம் ரூ‌.6000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை நாளை காலை 10:40 மணி முதல் பேடிஎம் மற்றும் www.insider.in என்ற இணையதளங்கள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.