ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியென 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அதன் பிறகு ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியென 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதால் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் சென்னை அணி முனைப்புடன் விளையாடும். அதே நேரத்தில் இதுவரை சேப்பாக்கத்தில் ஹைதராபாத்துடன் மோதிய 4 ஆட்டங்களிலும் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்த வெற்றியை இன்றும் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விறுவிறுப்பாக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதேபோன்று அகமதாபாத் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாககும்.