உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜிதேந்திரா என்பவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு நடந்த பார்ட்டியில் ஜிதேந்திராவிற்கு மது வழங்கப்பட்டுள்ளது. அதைக் குடித்த சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்து அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது மர்ம மரணமாகக் கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் சரியான காரணம் தெரியாததால் உடலின் பாகங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
நான்கு மாதங்களுக்குப் பிறகு வெளியான அந்த அறிக்கையில், ஜிதேந்திராவின் உடலில் ‘சல்பாஸ்’ எனும் கொடிய விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கணவன் – மனைவி இடையே நீண்ட நாட்களாக இருந்த குடும்பத் தகராறு காரணமாக, ஜிதேந்திராவின் மனைவி தனு மற்றும் அவரது தந்தை மகேந்திரா ஆகிய இருவரும் சேர்ந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுவில் விஷத்தைக் கலந்து கொடுத்துவிட்டு, ஜிதேந்திரா இயற்கையாகவே உயிரிழந்தது போல நாடகமாடியுள்ளனர். தற்போது தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் மாமனார் மகேந்திராவைக் கைது செய்த போலீசார், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
#aajtak पर #crime शो #वारदात में आज रात देखिये.आपके दिल दिमाग़ को झकझोरने वाली ऐसी खबर जहां ससुर ने ही दामाद को लगा दिया ठिकाने
जश्न के पीछे छिपी साज़िश का खौफनाक सच.
जन्मदिवस की पार्टी के बहाने पत्नी ने अपने पिता के साथ मिलकर पति को शराब में ज़हर देकर मौत के घाट उतार दिया।… pic.twitter.com/RB566cOxgQ— Nitin Uppadhyay (@NitinUpadhyay2) April 30, 2026
“>
மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜிதேந்திராவின் தாய் போராடி வந்த நிலையில், தற்போது மனைவி மற்றும் மாமனார் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்ப விழாவே மரணப் பொறியாக மாறிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
