உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் எடுக்கப்பட்ட  எகிற வைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், நபர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு பெல்ட்டும் இல்லாமல் மிக பிரம்மாண்டமான உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் பதறவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது ‘ஸ்கோட் ஜம்ப்’ என்று அழைக்கப்படும் ஒரு தீவிர சாகச விளையாட்டாகும் . பார்ப்பவர்களுக்கே நெஞ்சை பதறவைக்கும் இந்த விளையாட்டில், சாகச வீரர்கள் எவ்வித கயிறுகளும் இன்றி காற்றில் சுதந்திரமாக கீழே விழ அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

பாதுகாப்பு பெல்ட் இல்லை என்றாலும், இந்த சாகசத்தில் வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் மிகச்சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயரத்தில் இருந்து கீழே விழும் நபர் பத்திரமாக தரையிறங்குவதற்காக, கீழே ஒரு பிரம்மாண்டமான பாதுகாப்பு வலை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் காற்றில் பறந்து வந்து துல்லியமாக அந்த வலையில் விழும் காட்சிகள் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  சாகசங்களை விரும்புபவர்களை இந்த வீடியோ வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது