பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அரசு பேனர்களில், உள்ளூர் அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் அவர்களின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. அரசு முறை விழாவில் உள்ளூர் மக்கள் பிரதிநிதியின் பெயர் விடுபட்டது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்துத் தவெக அமைச்சர் ரமேஷ் அவர்களின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. ​விவரமறிந்த அமைச்சர் ரமேஷ், “அதிமுக எம்எல்ஏ-வும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதிதான்” எனக் கூறி, பேனரில் பெயர் விடுபடக் காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேடையிலேயே மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமின்றி, உடனடியாக அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் அவர்களிடம் நேரில் சென்று, “தவறா நினைச்சுக்காதீங்க, இனிமேல் இதுபோல் ஒருபோதும் நடக்காது” எனப் பெருந்தன்மையோடு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். அரசியல் நாகரிகத்தின் உச்சமாகப் பார்க்கப்படும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் காணொளி, தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பயங்கர வைரலாகி வருகிறது.