நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் பேசியுள்ளார். அப்போது அவர், தற்போதைய அரசின் வேளாண் துறையையும், அதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரையும் குறிவைத்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த மேடைப் பேச்சின் போது அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் தான் இப்போது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
விமர்சனம் வேற, நாவடக்கம் இல்லாம பேசுறது வேற சைமன்! 😡🤬 pic.twitter.com/WCbpNYTAu5
— Suresh (@Suresh199104) June 8, 2026
அவர் பேசுகையில், “வேளாண் துறைக்கு என்று எதற்காக ஒரு அமைச்சரை நியமித்தாய்?” என்று கேள்வி எழுப்பியதுடன், மிகவும் அநாகரீகமான மற்றும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியுள்ளார். இந்தத் தனிநபர் விமர்சனம் அடங்கிய வீடியோ தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும், “ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் நபர் பொது மேடையில் இப்படி அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுவது முறையல்ல” என்று சீமானின் இந்த அநாகரீகப் பேச்சுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வறுத்தெடுத்து வருகின்றனர்.
