“தற்போதைய புதிய அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுக்கலாம் என்று நினைத்தோம்; ஆனால் 3 மாதங்கள் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று தோன்றுகிறது” என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விமர்சித்திருந்ததாக, செய்தியாளர் ஒருவர் தவெக அமைச்சர் ரமேஷிடம் கேள்வி எழுப்பினார். இதற்குச் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், திமுக மற்றும் மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனங்களை மிகக் கடுமையாகச் சாடி, ஒற்றை வரியில் நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார். இந்தச் சுவாரசியமான காணொளி தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

​செய்தியாளரின் கேள்விக்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூடத்தான் அவர்கள் சொன்னார்கள், ஆனால் சொன்னபடி வெற்றி பெற்றார்களா? இல்லை அல்லவா! அதேபோலத்தான் இதுவும். அவர்கள் சொல்வது எதுவும் இங்கே நடக்கப்போவதில்லை” என்று மிக ஓப்பனாகக் கேலி செய்யும் தொனியில் பதிலளித்துள்ளார். ‘ஆட்சி கவிழும்’ என்று கணித்த எதிர்க்கட்சித் தலைவருக்கு, அவர்களின் பழைய தேர்தல் தோல்வி முழக்கத்தை நினைவூட்டி தவெக அமைச்சர் ரமேஷ் கொடுத்த இந்த அதிரடி பதிலடி, தற்போது எக்ஸ் வலைதளத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.