கிரிக்கெட் போட்டியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் அடித்த சிக்ஸர் பந்து ஒன்று, எதிர்பாராதவிதமாக மைதானத்தின் ஸ்டேண்டில் அமர்ந்திருந்த ஒரு சிறிய குழந்தையின் மீது பட்டது. இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போட்டி அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பிறகு, அர்ஜுன் டெண்டுல்கர் அந்த குழந்தையை நேரில் தேடிச் சென்று சந்தித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்தக் குழந்தையை நேரில் சந்தித்த அர்ஜுன் டெண்டுல்கர், அவரிடம் நலம் விசாரித்ததுடன், தன் சிக்ஸரால் குழந்தைக்குப் பட்ட அதே பந்தில் தனது ஆட்டோகிராஃபைப் (Autograph) போட்டு, அதனை அந்த குழந்தைக்கு அன்போடு பரிசாக வழங்கியுள்ளார். “தனது தந்தை சச்சின் டெண்டுல்கரைப் போலவே அர்ஜுன் டெண்டுல்கருக்கும் ஒரு பெரிய மனசு இருக்கிறது” என்றும், பிறருக்கு உதவும் குணத்தில் அப்படியே தனது தந்தையை உரித்து வைத்துள்ளார் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அர்ஜுன் டெண்டுல்கரின் இந்த மாஸ் செயலை சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.
