ஈரானின் அணுசக்தி உரிமைகளைப் பறிக்க முயலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஈரான் தனது அணுசக்தி உரிமைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் ட்ரம்ப், நாங்கள் செய்த குற்றம் என்ன என்பதைச் சொல்ல மறுப்பது ஏன்?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு நாட்டின் அடிப்படை உரிமையைப் பறிக்க ட்ரம்பிற்கு எந்தத் தகுதியும் இல்லை. நாங்கள் யாருடனும் போரை விரும்பவில்லை; ஆனால் அதே சமயம் ஈரானின் கண்ணியம் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க மாட்டோம். கண்ணியமான முறையிலேயே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2026-ல் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அணுசக்தி விவகாரம், ஈரான் அதிபரின் இந்தப் பேச்சால் மேலும் சூடுபிடித்துள்ளது.
