கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள புதியகாவு பகுதியில், பிரபல ரவுடி ஒருவன் ஆயுதம் ஏந்திய கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் ‘ஆலுவா அதுல்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நடந்த ‘ஜிம் சந்தோஷ்’ என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாவார்.
ஜாமீனில் இருந்த அதுல், நீதிமன்ற நிபந்தனைப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. எதிரிகள் இவரது காரை வழிமறித்து, தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டு, பின்னர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த அதுல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் பழைய பகையினால் நிகழ்ந்த பழிவாங்கும் நடவடிக்கை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக, ஜிம் சந்தோஷ் என்பவர் அவரது தாயின் முன்னிலையிலேயே கொல்லப்பட்ட வழக்கில் அதுல் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து, கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் பிடிபட்டார்.
View this post on Instagram
“>
தற்போது அவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
