சமூக வலைத்தளங்களில் தங்களை ஒரு பெரிய ‘ஹீரோ’ போலக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சில இளைஞர்கள் செய்யும் அநாகரிகச் செயல்கள் தற்பொழுது எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், இரவு நேரத்தில் நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர், தனது கையில் காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வைத்துக்கொண்டு, அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடலில் படும்படி பாட்டிலை நீட்டி தொடர்ந்து அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தான் செய்வதை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்து அந்த வாலிபர் ஆட்டம் காட்டிய நிலையில், அவருக்குத் தெரியாமலேயே அவருக்குப் பின்னால் மற்றொரு பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர், தங்களது மொபைல் கேமராவை ஆன் செய்து இவருடைய ஒட்டுமொத்த லீலைகளையும் ஆதாரத்துடன் கச்சிதமாக வீடியோ எடுத்துள்ளனர்.
Kudos to that guy for Confronting this mf pic.twitter.com/z4rQWUmO7t
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 6, 2026
அந்த வாலிபரின் அத்துமீறல் எல்லை மீறிச் சென்றதைத் தொடர்ந்து, பின்னால் வீடியோ எடுத்துக்கொண்டு வந்த இளைஞர்கள் அவரது பைக்கை அதிரடியாக வழிமறித்து நடுரோட்டில் வச்சுச் செய்துள்ளனர்.
கேமராவை அவரது முகத்திற்கு அருகில் கொண்டு சென்று சத்தம்போட்டுக் கேள்வி கேட்கத் தொடங்கியதும், அதுவரை பெண்களை வம்புக்கு இழுத்து வீராப்பு காட்டிய அந்த வாலிபரின் மொத்த பந்தாவும் அடங்கி, குழந்தையைப் போலக் கைகூப்பி அழுதுகொண்டே மன்னிப்புக் கேட்கத் தொடங்கியுள்ளார்.
பைக் ஓட்டி வந்த நபரும் தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல கைகளைக் காட்டிவிட்டு, பின்னால் இருந்த வாலிபரைக் கண்டிக்கத் தொடங்கியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வரும் வேளையில், இந்த வாலிபரின் பைக்கின் நம்பர் பிளேட்டை வைத்து உத்தரப் பிரதேச (UP) போலீசாரை நெட்டிசன்கள் டேக் செய்து வருகின்றனர்.
இத்தகைய ஆசாமிகளால் தான் பெண்கள் வெளியில் நடமாடப் பயப்படுகிறார்கள் என்றும், இவனை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் தங்களது கடுமையான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
