உலகின் மிக அபாயகரமான நச்சுப்பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ராஜநாகத்துடன் நபர் ஒருவர் தண்ணீரில் குதித்து விளையாடும் திகைப்பூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள நீர்நிலையில் நீந்திச் செல்லும் ராஜநாகத்தின் முன்னே திடீரென ஒரு நபர் குதித்து அதன் ஆக்ரோஷத்தைத் தூண்டும் வகையில் வினோதமான செயல்களில் ஈடுபடுகிறார்.

 

இதனால் கோபமடைந்த அந்தப் பாம்பு தனது படமெடுத்துச் சீறினாலும் எவ்வித அச்சமுமின்றி அந்த நபர் அதன் அருகே அமர்ந்திருப்பதுடன் ஒருகட்டத்தில் அந்தப் பாம்பைப் பிடித்துத் தனது முகத்திற்கு மிக அருகில் கொண்டு செல்கிறார்.

இயற்கை அத்தியாயம் என்ற பெயரிலான சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ள நிலையில் இது போன்ற ஆபத்தான செயல்களை நிபுணத்துவம் இன்றி செய்வது உயிருக்கு உலைவைக்கும் என்றும் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்ற கோணத்திலும் இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.