பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் இந்திய அணிக்கு ஒரு பயிற்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமான சூப்பர்-8 போட்டிகள் சவாலாக இருக்கும் என்பதால், முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு இதுவரை வாய்ப்பு கிடைக்காத மாற்று வீரர்களை நெதர்லாந்துக்கு எதிராகக் களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வீரர்களின் திறனைச் சோதித்துப் பார்க்கவும், முக்கிய வீரர்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.