உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தொடர்பான மோதலால் இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கான்பூரின் யசோதா நகர் புறவழிச்சாலை அருகே நடந்த இந்தச் சம்பவத்தில், வெள்ளை நிற உடை அணிந்த பெண் மற்றொரு பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து, சரமாரியாகக் குத்துகளையும் உதைகளையும் வழங்குகிறார்.
மேலும் “நீ அவனை ஏன் ‘பாபு’ என்று அழைத்தாய்? அவன் இப்போது என்னுடையவன்” என்று ஆவேசமாகக் கத்தியபடி அந்தப் பெண் தாக்குதல் நடத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்காப்புக்காகப் போராடி மன்னிப்புக் கோரியும், அந்தப் பெண் விடாமல் தாக்கியது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, கான்பூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
सूनसान सड़क,कैसी लड़कियां..
यूपी के कानपुर देर रात जिनके घर की ये औलाद,इन्हें शर्म न आएं,मां-बाप चुल्लू भर पानी में डूब मरेंगे?बीच सड़क वीडियो बना मारपीट-गाली गलौज? pic.twitter.com/TT7y5DomnC— Tushar Rai (@tusharcrai) December 29, 2025
“>
இந்த தாக்குதலுக்கு உள்ளான பெண் சாலையில் சென்ற வாகனங்களிடம் உதவி கோருவதும் அந்த வீடியோவில் தெரிகிறது. இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் தாக்குதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காகப் பொது இடத்தில் இளம்பெண்கள் இவ்வளவு வன்முறையாக நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
