டெல்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து மற்றும் வன்முறை சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு சிறிய வாக்குவாதத்தின் காரணமாக, ஆத்திரமடைந்த நபர் ஒருவர், உபெர் பைக் ஓட்டுநரின் தலையிலேயே ஹெல்மெட்டை அடித்து உடைத்துள்ளார்.

மேலும் இந்த பயங்கரமான சம்பவத்தின் போது பைக்கில் பயணித்த பெண் பயணி, தனக்கு நேர்ந்த அந்த கொடூரமான அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஒரு சிறிய மோதல் எப்படி இவ்வளவு பெரிய வன்முறையாக மாறியது என்பதை விவரிக்கும் வீடியோவும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

“>

இதனால் பாதிக்கப்பட்ட பெண் பயணி பகிர்ந்துள்ள தகவலின்படி, சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய தகராறு திடீரென வன்முறையாக வெடித்துள்ளது. சம்மந்தப்பட்ட நபர் ஓட்டுநரை மிகக் கொடூரமாக தாக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த பொதுமக்களும் உடனடியாக தலையிடாமல் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘ தலைநகர் டெல்லியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வன்முறையில் ஈடுபட்ட நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.