டாஸ்மாக் டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மபுரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த வழ விசாரித்தது. மனுதாரர் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கவனமாகக் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து அறிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சரும் கோயம்புத்தூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான செந்தில்பாலாஜியுடன் தொடர்புடைய இந்த வழக்கில், அவரது கூட்டாளியான டி. ரமேஷ் என்பவர் தமக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கையும், அதன் விசாரணையையும் தடை செய்ய வேண்டும் என்று கோரி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி வாதங்களை முன்வைத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த்தா டே மற்றும் மாநில அரசுப் பொது வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் ஆகியோர் ஆஜராகினர். மேலும், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதங்களை முன்வைத்தார். இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்கூட்டியே ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்குக் கைது நடவடிக்கையிலிருந்து இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

“>

 

டாஸ்மாக் டெண்டர் முறைகேடு தொடர்பான இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.