‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ வாயிலாகத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்த்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 11 புதிய திட்டங்கள் மூலம் ரூ.28,337 கோடி மதிப்பிலான முதலீடுகள் வரவுள்ளன. இதன்மூலம் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 9,420 புதிய வேலைவாய்ப்புகள் உறுதியாகியுள்ளன. இந்த முதலீட்டு ஈர்ப்பில் ஒட்டுமொத்த மாநிலத்தில் தூத்துக்குடி இரண்டாவது இடத்தையும், திருநெல்வேலி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 10 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

தூத்துக்குடியில் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் அமைக்கப்பட உள்ளது. இது தவிர விண்வெளித் தொழில்நுட்பம், ஹோவர்கிராஃப்ட் தயாரிப்பு, கண்டெய்னர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி துறைகளிலும் பெருமளவு முதலீடுகள் குவிகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் சார்பில் ரூ.15,037 கோடி மதிப்பிலான பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு உற்பத்தித் திட்டம் கொண்டுவரப்படுகிறது.

“>

 

இதுவரை சென்னை மற்றும் காஞ்சிபுரம் போன்ற வடமாவட்டங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த தொழில் வளர்ச்சிகள், தற்போது தென் தமிழகத்திற்கும் வெற்றிகரமாக விரிவடைந்து வருவது மாநிலத்தின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த அதிரடியான தொழில் முதலீடுகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.