சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தீவிரமடைந்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திரு.வி.நகர் மண்டலம், 74-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள எழும்பூர் கால்வாயில், மனிதர்களை ஈடுபடுத்தாமல் நவீன ரோபோடிக் அகழ்வாராய்ச்சி இயந்திரம் மூலம் தீவிர தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக்காலங்களில் நகரில் தேங்கும் மழைநீர் தங்குதடையின்றி வடியும் வகையில், பிரதான கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும்  வடிகட்டி அறைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. “குப்பைகளைத் தொட்டிகளில்தான் இடுவோம்… கால்வாய்களைப் பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வு முகாம்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“>

 

சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து துரிதமான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி களமிறங்கியுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.