சிம்லாவின் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் ராகவ் நருலா மற்றும் நோயாளி அர்ஜுன் பன்வார் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய வீடியோ நாடு முழுவதும் விவாதத்தை உண்டாக்கியது.

இரு தரப்பிலும் தவறுகள் நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தற்போது சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.சமீபத்தில் மருத்துவர் நருலாவும் நோயாளி அர்ஜுனும் நேரில் சந்தித்து பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு தழுவிக்கொண்டனர். பழைய கசப்பான சம்பவங்களை மறந்து இருவரும் சமாதானம் அடைந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“>

இது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் பன்வார், “டாக்டர் சாப் மன்னிப்பு கேட்டுவிட்டார், இனி இதில் பேசுவதற்கு எதுவுமில்லை ஒருவேளை நீங்கள் என்னை அவருடைய திருமணத்தில் கூட பார்க்கலாம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த மனப்பூர்வமான சமரசம் மருத்துவர் – நோயாளி இடையிலான உறவில் ஒரு நல்ல முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.