2022-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பிரபல கிறிஸ்தவப் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே, தனது பணியின் போது இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம் குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தின் போது, ஜெருசலேமில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலின் போது ஷிரீனின் சவப்பெட்டியைச் சுமந்து சென்றவர்கள் நிலைதடுமாறியதும், சவப்பெட்டி கீழே விழப்பார்த்த காட்சிகளும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Israelis don’t allow Christians funeral in the Holy Land
In 2022, Israel killed journalist Shireen Abu Akleh, a Palestinian Christian and then attacked her casket live on TV pic.twitter.com/jLVdD9GlAM
— Irlandarra (@aldamu_jo) December 26, 2025
புனித பூமியான ஜெருசலேமில் கிறிஸ்தவ இறுதிச்சடங்குகள் மற்றும் மத வழிபாட்டு உரிமைகள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுவதாக நீண்டகாலமாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. ஷிரீன் அபு அக்லேவின் இறுதிச்சடங்கில் நடந்த இந்த அசாம்பாவிதம், பாலஸ்தீன கிறிஸ்தவர்களின் மத சுதந்திரம் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்ததோடு, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மதச் சடங்குகளுக்கான மரியாதையை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தின.
