சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமான கனவாகும். அப்படி வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, வீட்டின் ‘அன்னபூரணி மண்டபம்’ என்று அழைக்கப்படும் சமையலறை  அமைக்கும் திசையானது, அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பொதுவாக, மேற்கு நோக்கிய  வீடுகளில் சமையலறையை எங்கு அமைக்க வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருப்பது உண்டு. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மேற்கு நோக்கிய வீடாக இருந்தாலும் சமையலறை அமைப்பதற்கு மிகவும் சிறந்த திசை தென்கிழக்கு  மூலையா ஆகும். இது நெருப்புக்குரிய திசை என்பதால், இங்கு சமையலறை அமைப்பது குடும்பத்தில் நேர்மறை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

ஒருவேளை தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால், இரண்டாவது தேர்வாக வடமேற்கு   திசையைப் பயன்படுத்தலாம். அதேவேளையில், சமையல் செய்யும்போது கிழக்கு நோக்கியபடி நின்று சமைக்கும் வகையில் அடுப்பை அமைப்பது மிகவும் சுபமானதாகக் கருதப்படுகிறது. இது சமைப்பவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் உணவின் ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

அதே சமயம், மேற்கு நோக்கிய வீட்டில் தென்மேற்கு அல்லது வடகிழக்கு  திசைகளில் தவறியும் சமையலறையை அமைக்கக் கூடாது என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த தவறான திசைகளில் சமையலறை அமைந்தால், அது வீட்டின் அமைதியைக் கெடுப்பதுடன் தேவையற்ற பண விரயம், ஆரோக்கியக் குறைபாடு மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே மனஸ்தாபங்களை உருவாக்கக்கூடும். எனவே, புதிய வீடு கட்டும்போதோ அல்லது புதுப்பிக்கும்போதோ முறையான வாஸ்து விதிகளிப்படியே சமையலறையை அமைப்பது நல்லது.