கர்நாடக மாநிலத்தின் நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு வாகனம் டயர் வெடித்ததால் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஓட்டுநர் ரவி என்பவருக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. தொழிலாளர்களான பாபு மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி ஆகியோருக்கு காலில் காயங்கள் ஏற்பட்டன.
A pickup truck carrying several workers overturned on a highway after a sudden tyre burst.
The dramatic crash, caught on CCTV, took place in #Karnataka‘s #Kodagu district on Monday morning. pic.twitter.com/mjXK6wlnbb
— Hate Detector 🔍 (@HateDetectors) November 26, 2025
“>
மேலும் இரண்டு பேர் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மடிகேரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சோமவார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
