சீர்காழி அருகே உள்ள அரசூர் ரயில்வே கேட் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, அங்கிருந்த கேட் கீப்பர் தனது உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாளத்தில் நபர் ஒருவர் பாய்ந்ததைக் கண்ட அந்த கேட் கீப்பர், சற்றும் யோசிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரைப் பாதுகாப்பாக இழுத்து மீட்டுள்ளார். கேட் கீப்பரின் இந்தத் துணிச்சலான மற்றும் மனிதாபிமானமிக்கச் செயலை அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த கேட் கீப்பரின் வீரத்தைப் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். சரியான நேரத்தில் அவர் காட்டிய சமயோசித புத்தியும், துணிச்சலும் ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளது.

“>

 

ரயில்வே ஊழியர்களின் இத்தகைய மனிதாபிமானச் செயல்கள் சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பலருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.