அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் நடந்த திருமணத்தின் போது, மணமகன் திடீரென மண்டபத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகனின் செல்போனுக்கு ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் அவரது முன்னாள் காதலி என்று கூறி, அவருடன் இருந்த புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

“>

 

அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அதிர்ச்சியில் மணமகன் மணமேடையிலிருந்து திடீரென வெளியேறி ஓடிவிட்டார். அவர் ஓடுவதைக் கண்ட மணமகள் வீட்டார் மற்றும் உறவினர்கள் அவரைத் துரத்திச் சென்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.