இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருக்கான நிகழ்வில், தனக்கு “இந்திய டிஎன்ஏ” இருப்பதாகப் பெருமையுடன் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தோனேசியாவிற்குப் பயணம் செய்வதற்கு முன்பாகத் தான் செய்த மரபணு பரிசோதனையில், தனக்கு இந்திய டிஎன்ஏ இருப்பது தெரியவந்ததாகவும், அதனால்தான் இந்திய இசையைக் கேட்கும்போது தனது உடல் தானாகவே அசைவதாகவும் அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

இந்தத் தகவல் அங்கிருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், கைதட்டல்களையும் பெற்றுத் தந்தது. மேலும், தனது அமைச்சர்கள் மற்றும் தளபதிகளிலும் பலருக்கு இந்திய டிஎன்ஏ இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டது நிகழ்ச்சியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்தோனேசிய அதிபரின் இந்த அன்பான கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டினார். இது கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களை வென்றுவிட்டதாகவும், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான ஆழமான உறவின் அடையாளமாக இது திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவானது இந்த பிணைப்பு என்று பிரதமர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியதற்காக, இந்தோனேசியாவின் மிக உயரிய விருதான ‘பிந்தாங் ரிபப்ளிக் இந்தோனேசியா அடிபர்னா’ விருதைப் பிரதமர் மோடிக்கு அதிபர் பிரபோவோ வழங்கிய சில காலத்திலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.