மும்பையில் வீடு வாடகைக்கு எடுப்பது என்பது ஏற்கனவே சவாலான விஷயமாக இருக்கும் நிலையில், தற்போது வாஸ்து மற்றும் ஜாதகத்தை தாண்டி ‘எண் கணிதம்’ அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு வீடு மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்மிதா சிங் என்ற இன்ஃப்ளூயன்ஸர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, அவரது தோழி ஒருவர் வீடு பார்க்கச் சென்றபோது, அந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளார். அந்த உரிமையாளர், வீட்டின் கதவு எண் மற்றும் அந்தப் பெண்ணின் பிறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படும் எண் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அவை பொருந்தவில்லை என்றும், இது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறி வீட்டை வாடகைக்கு விட மறுத்துவிட்டார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. இவ்வளவு கல்வி கற்ற உரிமையாளர்களும் இத்தகைய மூடநம்பிக்கைகளை நம்புவதா என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். மும்பையின் வீட்டு வாடகை சந்தையில் நிலவும் இத்தகைய விசித்திரமான மற்றும் அநாகரீகமான நிபந்தனைகள், வாடகைக்கு வீடு தேடும் நபர்களுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலைத் தருகிறது என்பதை இந்த விவகாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
View this post on Instagram
“>
இச்சம்பவம் தொடர்பாக இணையவாசிகள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருவதுடன், மும்பையில் வீடு தேடும்போது எதிர்கொள்ள வேண்டிய இத்தகைய சவால்கள் குறித்து நகைச்சுவையாகவும், விமர்சன ரீதியாகவும் பேசி வருகின்றனர்.
