மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபரான கேதன் அகர்வால் என்ற வாலிபர் தனது வருங்கால மனைவி சீயா கோயலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது அதிர்ச்சியூட்டும் பல புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சீயா கோயல் கடந்த பிப்ரவரி 2026-ல் கேதனுடன் நிச்சயதார்த்தம் செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, தனது கள்ளக்காதலன் சேத்தன் சவுத்ரி என்பவரை உள்ளூர் அதிகாரி அலுவலகத்தில் ரகசியமாக திருமணம் செய்து அம்பலமாகியுள்ளது.
சீயாவின் கல்லூரித் தோழிகள் இருவர் இந்த ரகசிய திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட்டுள்ளனர், இவர்கள் இருவரும் தற்பொழுது போலீஸ் வளையத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடக்கவிருந்த பிரம்மாண்ட டெஸ்டினேஷன் திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் சீயாவிடம் ஆவணங்களைக் கேட்கத் தொடங்கியதால், தனது ரகசிய திருமணம் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில், கடந்த 2025-ல் நடந்த சோனம் ரகுவன்ஷி என்ற பெண்ணின் ஹனிமூன் கொலைச் சம்பவத்தை இன்டர்நெட்டில் படித்து, அதே பாணியில் கேதனை மலைக் பள்ளத்தாக்கிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்து.
அண்மையில் விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி ஊடகங்களை நோக்கி நடுவிரலைக் காட்டி அராஜகம் செய்த சீயா கோயல், 12-ம் வகுப்பில் தோல்வியடைந்து ஹோம் பேக்கிங் பிசினஸ் செய்து வந்தவர் என்பதும், இவர்களின் இந்த திட்டமிட்ட கொலைச் சதி தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
