தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை இன்று (நவ. 26) திறந்து வைத்தார்.
அப்போது, அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் விடுபட்ட, தகுதியுள்ள பயனாளிகளுக்கு, வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் மாதந்தோறும் ₹.1000 வழங்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், இந்த அறிவிப்புடன், மத்திய பாஜக அரசு மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுக அரசு அளித்த அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதாகவும், இந்தத் திட்டங்கள் தொடரும் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். டிசம்பர் 15 முதல் விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கும் ₹.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பலரது மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
