தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தைப் பெருக்கிவரும் நிலையில், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில் மாபெரும் இணைப்பு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, வீரபாண்டியபுரம் பட்டா தொழிலதிபர் சந்தனபாண்டியன் தலைமையில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தங்களைத் திரண்டு அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பு நிகழ்வு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நடைபெற்றது. சந்தனபாண்டியனின் செல்வாக்கால், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சிக்குக் கிடைத்துள்ள இந்த மாபெரும் இணைப்பு, விருதுநகர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிமுகவின் களப்பணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.