தமிழக நெடுஞ்சாலைத் துறையில் சமீபகாலமாக பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவாக, புதிய சாலைகள் போடப்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த ஒப்பந்ததாரரே பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி.
ஆனால், இந்த விதியைப் புறந்தள்ளிவிட்டு, ஜனவரி 2026-ல் தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளைப் பராமரிக்க அமைச்சர் எ.வ.வேலுவின் உத்தரவின்பேரில் 600 கோடி ரூபாய்க்குப் புதிய டெண்டர் விடப்பட்டுள்ளது.
பராமரிப்புத் தேவை இல்லாத சாலைகளுக்கும் இந்த டெண்டர் விடப்பட்டதில், சுமார் 35 சதவீதத் தொகையை அமைச்சர் லஞ்சமாகக் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்ததாரர்களும் தாராளமாக லஞ்சம் வழங்கியுள்ளனர்.
இந்த முறைகேடுகளுக்குத் துணையாக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பிரிவின் தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் அமைச்சர் வேலுவுக்கு 40 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்றதும் சத்யபிரகாஷ் 43 மண்டலங்களில் தலா 25 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.
தமிழக நெடுஞ்சாலை துறையில் ஒரு விஞ்ஞான ஊழல்
தமிழக நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் சாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்படும்.
(1) SH – State Highways
(2) MDR – Main District Roads
(3) ODR – Other District Roads
ஒரு சாலை புதிதாக போடப்பட்டால் அந்த ஒப்பந்ததாரர் அடுத்த 5… pic.twitter.com/qLpyRrdaYw
— Savukku Shankar (@SavukkuOfficial) June 25, 2026
“>
மேலும், ஏற்கனவே ஓய்வுபெற்ற சந்திரசேகர் என்ற பொறியாளரை, ‘சீனியர் டெக்னிக்கல் ஆபீசர்’ என்ற பெயரில் மீண்டும் பணியில் அமர்த்தி, அவர் மூலமாகப் பிரத்யேகமாக லஞ்ச வசூல் வேட்டையை அமைச்சர் நடத்தி வருவதாகப் பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அதிகாரிகளை வைத்து லஞ்சம் வசூலிக்கும் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
