வானில் நிகழும் அதிசயமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில், இதைக் காண முயன்ற தொழிலதிபர் ஒருவரை பிரபல மாடல் அழகி பிகினி உடையில் தடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

பிரபல கவர்ச்சி மாடல் அழகியும் பெண் தொழிலதிபருமான கேத்தி பிரைஸ் சூரிய கிரகண நிகழ்வைக் கொண்டாடும் வகையில் ஸ்பெயினின் இபிசா நகரில் உள்ள கடற்கரை ஓரத்தில் ஒரு பிரத்யேக விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பகுதியில் மற்றொரு தொழிலதிபரான வெய்னே லைன்கர் என்பவருடன் இணைந்து அவர் பொழுதைக் கழித்தார்.

வெய்னே கடற்கரையில் சூரிய குளியல் எடுத்தபடி சாய்வாகப் படுத்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக கருப்பு நிற பிகினி உடையில் கேத்தி அவருக்கு முன்னே வந்து குனிந்து நின்றார். அந்த நேரத்தில் வானில் சூரிய கிரகணம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால், கேத்தி சரியாக சூரியன் இருக்கும் திசையை நோக்கி நின்றதால், வெய்னேவால் அந்த அதிசயக் காட்சியைத் முழுமையாகக் காண முடியவில்லை.

கருப்பு நிற பிகினியுடன் சூரியனை மறைத்தபடி கேத்தி நின்றதைக் கண்ட வெய்னே, உடனே டென்ஷன் ஆகாமல் ஜாலியாக, “அட கடவுளே, சூரியனுக்கு என்ன ஆனது?” என்று கேட்டுள்ளார். அதற்கு சற்றும் தாமதிக்காமல் கேத்தி, “வெள்ளை சாக்லேட்டே… நீங்கள் வெயிலில் கரைந்து போக நான் விரும்பவில்லை” என்று செல்லமாக பதிலளித்தார். வெய்னே சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்து பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்படிச் செய்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், சூரியனை கேத்தி தனது உடலால் மறைத்ததையும், அப்போது நிகழ்ந்த சூரிய கிரகணத்தையும் இணைத்துவிட்டு வெய்னே  கேத்தியைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர், “என்ன… இப்போது எனக்கு 3 சூரிய கிரகணம் தெரிகிறதே?” என்று நக்கலாகக் கூறினார். இவர்களின் இந்த ஜாலியான கலாய்ப்பு வீடியோ தற்போது இன்டர்நெட்டை கலக்கி வருகிறது.