திருவாரூரில் நேற்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணனின் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த விழாவில் ஆவேசமாகப் பேசிய ஆ. ராசா, இனி திமுக கூட்டணி கிடையாது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், “வரும் தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிடும்; நாம் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்குவோம்” என முழக்கமிட்டார்.
திமு கழகம் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் 🔥🔥🔥
😎 🖤❤ pic.twitter.com/mvWyxGkJ1F
— சிலுவை (@SiluvaM_) June 25, 2026
“>
தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்த அவர், கழகத்தின் வலிமையை நிரூபிக்கும் வகையில் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேசியது அந்த இடத்தையே அதிரவைத்தது.
