பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா, சிறைக்குள் ரகசியமாகச் செல்போன் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறை வளாகத்திற்குள் நடந்த சோதனையின் போது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் இருந்து அதிரடியாக ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மிகுந்த சிறைப் பகுதிக்குள் செல்போன் எவ்வாறு உள்ளே வந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, சிறைத்துறை அதிகாரி ஒருவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாலியல் வன்கொடுமை மற்றும் வழக்குகளில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்குத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இந்தச் செல்போன் விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Former JD(S) MP Prajwal Revanna was allegedly caught using a mobile phone inside Bengaluru prison.
A phone was recovered from his cell, while a jail official was suspended over security lapses. pic.twitter.com/8BA5G0FtYX
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 13, 2026
“>
உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட சிறைச்சாலைக்குள் ஒரு முக்கியக் கைதிக்குச் செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்துச் சிறைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
