மகாராஷ்டிர மாநிலம் பால்ஷேர் பகுதியில் 19 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவரை, 6 பேர் கொண்ட கொடூரக் கும்பல் வழிமறித்துத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பேரதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. சம்பவத்தன்று இரவு வேளையில் தனது தேவைகளுக்காக வெளியே சென்று கொண்டிருநத் அந்த இளம் பெண்ணை, அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரெனச் சூழ்ந்து வழிமறித்துள்ளது.
அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோதிலும், அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு தனிமையான இடத்திற்குக் கடத்திச் சென்றுள்ளனர். அந்த நள்ளிரவு நேரத்தில், தனிமையில் மாட்டித் தவித்த அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்துத் தகவல்கள் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளன.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்துப் புகாரின் அடிப்படையில், பால்ஷேர் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். குற்றத்தில் ஈடுபட்ட அந்த 6 பேரையும் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு இரவு நேரப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
