விமான நிலையங்களில் பயணிகள் தங்களது கடின உழைப்பிலும், வியர்வை சிந்திய சம்பாத்தியத்திலும் வாங்கி வரும் உடைமைகள் மற்றும் பரிசுப் பொருட்களை ஏர்போர்ட் ஊழியர்கள் எவ்வளவு பொறுப்பற்ற முறையிலும் அலட்சியமாகவும் கையாள்வார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது.
விமானத்தில் இருந்து பயணிகளின் லக்கேஜ் பைகளை ஏர்போர்ட் ஊழியர்கள் தரையில் கொடூரமான முறையில் தூக்கி வீசி எறியும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு பயணியின் பையிலும் அவர்களின் பல வருட உழைப்பும், தங்களது குடும்பத்தினருக்காகவும், குழந்தைகளுக்காகவும் ஆசையோடு வாங்கி வரும் விலைமதிப்பற்ற கனவுகளும், பரிசுப் பொருட்களும் ஒளிந்திருக்கின்றன என்பதைப் பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் ஊழியர்கள் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர்.
தங்கள் வீட்டு வாண்டுகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆசை ஆசையாக வாங்கி வந்த கிஃப்ட்கள், ஊர் வந்து சேர்ந்து பையைத் திறந்து பார்க்கும் போது உடைந்து நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு பல பெற்றோர்கள் நிலைகுலைந்து கண்ணீர் விடுகின்றனர். பயணிகளின் இந்த நெஞ்சை பிழியும் வலியையும் வேதனையையும் இந்த ஏர்போர்ட் ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் ஒருபோதும் புரிந்து கொள்வதே இல்லை என்று நெட்டிசன்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Airport पर कैसे गैर–जिम्मेदार तरीके से सामान फेंका जाता हैं
बैग में किसी की मेहनत और सपना का कीमती सामान हो सकता हैं
कोई अपने बच्चों के लिए गिफ्ट लाता है, जो टूटा हुआ मिलता है
उस दर्द और दुख को ये लोग कभी नहीं समझ सकते
क्या किसी के सामान को ऐसे तोड़ना सही है❓ pic.twitter.com/Ty5UkNnBKh
— Soniya Deshwal (@ImSoniya24) June 25, 2026
மற்றவர்களின் உடைமைகளை இப்படி மிருகத்தனமாகத் தூக்கி எறிந்து உடைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள பொது மக்கள், சம்பந்தப்பட்ட ஏர்போர்ட் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
