தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்த கடையில் முகமது ஆசிக் (25) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டினர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் அதற்கு அந்த பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அதாவது பெண்ணின் இரட்டை சகோதரர்களான ஜன அம்ச பிரியன் மற்றும் ஜனரஞ்சன் ஆகியோர் வாலிபரை கொலை செய்துள்ளனர். மேலும் தற்போது இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் இரட்டை சகோதரர்கள் உட்பட பரிதிவளவன் மற்றும் கௌதம் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.