
பாஜக தொண்டர்களிடம் பேசிய அக் கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, உங்க அப்பன் தான் தமிழனை குடிக்க வச்சு, தமிழன் குடியை கெடுத்த நபர் மு.கருணாநிதி 1970 ஆகஸ்ட் 31 குடிக்காத தமிழனை…. குடி என்றால் என்னனு தெரியாதவன, குடிக்க வச்சு… குடி கெடுத்த குடும்பம் யாரு ? ஸ்டாலினோட குடும்பம்…. அவங்க அப்பா தான் தமிழன குடிகாரன் ஆக்கின ஒரு குடி கெடுத்த நபர்,
தமிழ் குடும்பத்திற்கு கேடு விளைவித்த முதல் குடி கருணாநிதி குடி…. அவ்வளவு மோசமான குடும்பம்…. தமிழனை குடிக்க வச்சவன்… நான் கேட்கிறேன் ஐயா… 50,000 கோடி டாஸ்மார்க் வருமானம்…. அப்படியும் பட்ஜெட்டில் 39,000 கோடி பற்றாக்குறை. ஆனா குஜராத்தில் டாஸ்மார்க் வருமானமே கிடையாது. உபரி பட்ஜெட்… நீ ஆள தெரிஞ்சவனா… அவங்க ஆள தெரிஞ்சவங்களா ? ஆகவே குடி கெடுத்த ஒரு குடும்பம் மீண்டும் நம்முடைய தலைமுறைகளையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
அவங்க கட்சிக்கான 3500 கிலோ வித்து இருக்கான். இன்னைக்கு NCB ஓட அக்கவுண்ட் படி 5600 கோடி ரூபாய் இருக்கு. அதுல அவன் என்ன சொல்லி இருக்கான் ? 600 கோடி ரூபாய்க்கு மேல் சினிமா உலகத்துக்கு கொடுத்து இருக்கேன்…. திரை உலகத்திற்கு…. நீங்க ஒன்று மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க…. ராஜாவை பற்றி மோசமா பேசினாலும், ராஜராஜ சோழன மோசமா பேசினாலும்….
அவன் இந்த போதைப் பொருளில் சம்பாதித்து இருப்பான் என்று அர்த்தம்…. அவன் அமீரா இருக்கலாம், அமீர்னா பணக்காரன்….இந்த போதை பொருள்னால பணக்காரனாகி இருப்பானு சொல்ல வந்தேன். அவன் அமீராக கூட இருக்கலாம். அதனால அவன் ராஜாவையும் ஏசுகிறான், ராஜராஜனையும் ஏசுறான் என தெரிவித்தார்.