மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வடசென்னை, தென் சென்னை, கோவை, நீலகிரி, மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது . மேலும் மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.