தமிழகத்தில் 7 தனி தொகுதிகள் உட்பட 39 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகின்றது. பொதுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதனைப் போலவே தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.

தேர்தலில் பதிவான செல்லுபடி ஆகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற தவறினால் வேட்பாளர் டெபாசிட் இழப்பார். முதல் கட்ட தேர்தலிலேயே தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் இன்று முதல் தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் எனவும் மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.