ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரின் தோல்விக்கு ‘எஸ்.ஐ.ஆர்’  எனப்படும் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

விரைவில் ஆந்திராவில் இந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் இதேபோல 74 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி உட்பட அம்மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வரவிருக்கும் எஸ்.ஐ.ஆர் பணிகளைத் தங்களது கட்சியினர் மிகத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.