குழந்தை பிறக்கும் தருணம் என்பது பெற்றோருக்கு மட்டுமல்ல, மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே ஒரு குழந்தை செய்யும் சிறு அசைவு கூட அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடும்.

அப்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தை, பிறந்ததுமே மருத்துவமனை மருத்துவருக்கு அளித்த இன்ப அதிர்ச்சி குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

மருத்துவமனையில் குழந்தை பிறந்த உடனே, குழந்தையின் ஆரோக்கியத்தைப் பரிசோதிப்பதற்காக மருத்துவர் தனது ஸ்டெதாஸ்கோப்பை குழந்தையின் நெஞ்சில் வைத்துள்ளார். அப்போது, அனைவரும் வியக்கும் வண்ணம் அந்தப் பச்சிளம் குழந்தை, தனது பிஞ்சு விரல்களால் மருத்துவரின் ஸ்டெதாஸ்கோப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

தன் கைகளில் கிடைத்த அந்த மருத்துவக் கருவியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அந்தப் பிஞ்சு குழந்தையின் சுட்டித்தனத்தைக் கண்டு மருத்துவர்களும், அங்கிருந்த செவிலியர்களும் பெரும் ஆச்சரியமும் சிரிப்பும் அடைந்தனர்.

இந்தக் அழகிய தருணத்தை மருத்துவர் புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்த நிலையில், அது குறுகிய நேரத்திலேயே காட்டுத்தீ போலப் பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்தப் பிஞ்சு குழந்தையை சின்ன பாகுபலி என்று செல்லமாக அழைத்துத் தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“இந்தப் பையன் எதிர்காலத்துல பெரிய டாக்டராகத்தான் போறான்” என்றும், “பிறக்கும்போதே மருத்துவக் கருவியைப் பிடித்து தனது எதிர்காலத்தைக் காட்டிவிட்டான்” என்றும் இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட்டுகளைப் பதிவிட்டு லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

“>