நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த டென்ஷனான சூழலையும் தாண்டி ஒரு இன்ஸ்டாகிராம் கிரியேட்டரின் ஜாலியான மற்றும் நையாண்டி கலந்த வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் போராட்டக் களத்திற்குச் செல்வதற்காக தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் பிரபலமாய் இருக்கும் தோசீப் கான் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வைரல் வீடியோவில் பேசியுள்ள தோசீப் கான், “வாங்க, என்னுடன் சேர்ந்து போராட்டத்திற்குத் தயாராகலாம்” என்று ஜாலியாகத் தொடங்குகிறார். முதலில் தடியடி வாங்குவதற்கு வசதியாகத் தனது கருப்பு நிற பேன்டிற்குள் இரண்டு ஃபோம் துண்டுகளைப் பொறுத்திக் கொள்ளும் அவர், “போராட்டத்தில் அடி வாங்குவது உறுதி என்பதால் மக்கள் பாதுகாப்பாக வருவது நல்லது” என்று நையாண்டியாகக் கூறுகிறார். தொடர்ந்து, காயங்கள் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் சட்டை அணிவதாகவும், முதுகுப் பகுதியைச் பாதுகாக்கக் கூடுதல் ஃபோம் வைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். மேலும், போராட்டத்தில் சட்டை கிழிந்தால் மாற்றுவதற்காக ஒரு எக்ச்ட்ரா சட்டையையும் தன் பையில் அவர் எடுத்து வைக்கிறார்.
View this post on Instagram
தான் மட்டும் பாதுகாப்புடன் செல்வதோடு நின்றுவிடாமல், மற்றவர்களின் நலனையும் யோசித்து அவர் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர், “பெண்கள் போராட்டத்தின் போது துணிகளுக்காக சிரமப்பட்டால் கொடுப்பதற்காக என்னிடம் ஒரு எக்ஸ்ட்ரா குர்தியும் இருக்கிறது” என்று கனிவோடு குறிப்பிடுகிறார். மேலும், தலைப் பாதுகாப்பிற்காக ஹெல்மெட், ஓடுவதற்காக ஸ்போர்ட்ஸ் ஷூ, போன் சார்ஜ் செய்ய பவர் பேங்க், கண்ணீர்ப்புகைக் குண்டுகளிலிருந்து தப்பிக்க நீச்சல் கண்ணாடிகளுக்குப் பதிலாக improvised பாதுகாப்பு கண்ணாடிகள் மற்றும் கண்களைக் கழுவ 20 லிட்டர் தண்ணீர் கேன் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தனது பையில் அடுக்குகிறார். காவல்துறை விசாரணை செய்தால் எப்படிப் பவ்யமாக மன்னிப்பு கேட்டு தப்பலாம் என்பதையும் அவர் நையாண்டியாக நடித்துக் காட்டியுள்ளார்.
தோசீப்பின் இந்த சாமர்த்தியமான மற்றும் நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு வீடியோவை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். “இது பேக் இல்லை, முழுமையான ‘புரட்சி எமர்ஜென்சி கிட்'”, “மற்றவர்களின் பெண் தோழிகளின் கௌரவத்தையும் சேர்த்து யோசித்த அவரது குணம் பாராட்டத்தக்கது” என்று பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருவதுடன், ஜென் Z தலைமுறையின் இந்த வித்தியாசமான போராடும் முறையை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
