தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு தொடர்பான மாணவர்களின் போராட்டம் தலைநகர் டெல்லியில் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு நடைபெற்ற மோதல்களின் போது டெல்லி காவல்துறையினரையே அதிர வைத்த மாபெரும் சக்தி குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மாணவர்களின் போராட்டத்தின் பின்னணியில் இருந்து அவர்களுக்கு மாபெரும் பாதுகாப்பு அரணாகச் சிறப்பாக வரும் ‘நிஹாங் சிங்’ அமைப்பினரைப் பார்த்து ஒட்டுமொத்தக் காவல் படையினரும் அஞ்சித் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ‘நிஹாங் சிங்’ என்று அழைக்கப்படும் இவர்கள், சீக்கிய மதத்தின் பாரம்பரிய போர்க்கலை மற்றும் தற்காப்புக் கலைப் பெருமைகளைக் கொண்ட அமைப்பைச் சார்ந்தவர்கள்.

தலைமுறை தலைமுறையாகத் தற்காப்புக் கலைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பயிற்றுவித்து வரும் இவர்கள், ஆயுதங்களைக் கையாள்வதில் இணையற்ற வல்லமை படைத்தவர்களாகத் திகழ்கின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் தங்களது பாரம்பரியக் கத்திகள் கீர்பான், ஈட்டிகள் மற்றும் வாள்களைத் தடையின்றித் தங்களுடன் எடுத்துச் செல்வதற்கான சட்டபூர்வ உரிமையும், லைசென்ஸும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவர்களின் வரலாற்றுப் பின்னணியும், அஞ்சா நெஞ்சமும், கையில் இருக்கும் கூர்மையான ஆயுதங்களுமே காவல்துறையினரை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்துகிறது. டெல்லியில் நடைபெறும் நீட் போராட்டக் களத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி அல்லது தாக்குதல் நடத்த முற்படும் போது, இந்த நிஹாங் சிங்குகள் முன்னணியில் நின்று மாணவர்களுக்கு அரணாகச் செயல்படுகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Edison (@edison_vlogs_tamil)

“>

“முடிந்தால் எங்களைத் தாண்டிச் சென்று மாணவர்களைத் தொட்டுப் பாருங்கள்” என்ற பாணியில், மாணவர்களின் பாதுகாவலர்களாக நின்று தங்களது முழு ஆதரவையும் அளித்து வருகின்றனர். இவர்களின் இந்த அதிரடி நுழைவு டெல்லி போராட்ட களத்தின் போக்கையே முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.